இன்னும் எவ்வளவு தூரம்

அந்த ஏரிக்கரை
ஆரவாரமாய் இருந்ததால்
விலகி நடந்து
மலையின் மேலே போகப் போக
வெண் பஞ்சு மேகம் ஒன்று
தழுவி சென்றது ..என்னை!

எங்கு நோக்கினும்..
பச்சைக் கம்பளம்..
இறையுடன் ..
பேசிக் கொண்டிருந்தது..
இயற்கை..!

எவ்வளவு
சிறிதாகிப் போனேன்..நான்!
இயற்கையின் முன்னே!
அமைதியின் புன்னகையில்..
ஆதவனும் அவ்வப்போது
சேர்ந்து கொள்ள
தூரத்தில்
வர்ணங்கள் வளைந்து
தோன்ற..
மெல்லமாக..
கீழிறங்கி வருகிறேன்..
இன்னும் நான்
போக வேண்டிய
தூரம் எண்ணியே!

எழுதியவர் : கருணா (1-Jan-15, 5:34 pm)
பார்வை : 310

மேலே