அழாதே வைரமுத்து - சந்தோஷ்

வெண்மேக வாகனத்திலேறி
வானத்தில் சுற்றுலா செல்கிறேன்
கம்பனே உனக்கேன் பொறாமை ?

வெள்ளிநிலாவிற்குள் ஊடுருவி
வடைசுடும் என் பாட்டியின்
கைகளுக்கு முத்தமிடுகிறேன்
கம்பனே உனக்கென்ன ஆத்திரம் ?

வானவில்லின் சிவப்பெடுத்து
அந்திவானில் மன்மத சாயுங்காலத்தை
என்னவளின் துப்பட்டாவினால்
மெய்மறந்து பூசி மகிழ்கிறேன் .

ஏய் கம்பனே..!!இன்னுமென்ன
என்னையே முறைக்கிறாய்.. ?

முகில்தாளத்தை தட்டியுடைத்து
பூமித்தாளில் மழைக்கவிதையினை
மெட்டுப்போட்டு எழுதுகிறேன்.
வைரமுத்துவே..! அங்கென்ன சத்தம் ?
கம்பனை கட்டியணைத்து கொண்டு ??
ஓ .. ஓ... ஒப்பாரி கீதமோ??


அழாதே..! அழாதே.....!!
வைரமுத்துவே அழாதே....!

இதோ ..!! விடிந்துவிட்டது.
ரெக்கையிட்ட என் கனவும்
கோட்டைக்கட்டிய கற்பனையும்
பகல் சூட்டில் கரைந்துவிடும்.

என் காதலைப்போல.................!!!

------

-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (2-Jan-15, 3:04 pm)
பார்வை : 169

மேலே