பரமபத வாசல்

கண்விழித்து பார்த்திருப்பார்
உன் தரிசனத்திற்கு காத்திருப்பார்
பல வாயில்கள் திறந்திருக்க
இந்த வாயிலில் தவம் கிடப்பார்

வருடம் முழுதும் காக்க வைத்து
ஓர் அதிகாலை வாசல் திறக்கும்
நாராயணா நாராயணா கோஷம்
அந்த வைகுண்டதிற்கே கேட்கும்

விபீஷணனுக்கு அயர்வு தோன்றவும்
ரங்கவிமானம் சிறிது கீழிறங்கவும்
காவிரிகொள்ளிடம் உன்னை தாங்கவும்
கண்ணார உன்னை கண்டுகொண்டோம்

கல்விக்கு ஹயக்ரீவ நாமம் சொல்வோம்
ஆரோக்யத்திற்கு தன்வந்தரி சேர்வோம்
செயலாக்கத்திற்கு சுதர்சனம் தொழுவோம்
கண்ணிருக்கும் வரை உனை பார்த்திருப்போம்

எழுதியவர் : கார்முகில் (2-Jan-15, 8:12 pm)
சேர்த்தது : karmugil
பார்வை : 147

மேலே