குமரக்கிழவனின் காதல்

இல்லாமல் போனாதாலே இக்கட்டு இடிபோல இமையோரம் வழிந்தது
சில்லறைகள் சென்றடையும் இடத்திலே சிக்கிவிட்டால்
பிணம் கூடி பாவணராகும் சில நொடியிலே
ஏர் எடுத்து மண்ணில் போர் தொடுத்த கிழட்டுப்பய
கீழ்க்கண்டான் சோழக்கால பொட்டியொன்னை
நெஞ்சோட அணைச்சிக்கிட்டு பிடரிப்பட பிச்சிகிட்டு
குடிசைப் பெயரில் குடியிருந்த குடலைக்குள் குதிச்சிவிட்டு
சம்சாரத்தை நோக்கி மின்சாரமாய் பாய்ஞ்சான் குமரனாய்
அந்நேரம் காதல் மலர்ந்து அவ இடுப்பைப் புடிச்சி பட்ட கஷ்தம்
பலனாகி போகிருசின்னு இழுத்து வெச்சி இதழோட இதழ் சேர்ந்தான் குமரக்கிழவன்
நரிக்க நரிக்க உத்துப்பாத்த ரெண்டுப்பல் பாட்டியவள்
பத்து பேருக்கு பூட்டியாகிய புனையிழை என்றாலும் தன மன்னன் சொல் கேட்டு
செம்பருத்தியை நேர்நிறுத்தி வைத்ததைப் போல் மலர்ந்து நின்றாள்
பரம்பரையாய் கழிக்கொட்டி காலம் தாழ்த்திய வாயில் இனி
கனிவந்து நீந்திடும் நேரம் என்று கனவுகளுடன் கண்திறந்து
பொட்டியின் கதவு திறந்து ஆசையுடன் பசிப் பார்வையோட பாக்க
நெஞ்சுக்குள் தேன்நூற பட்டினியா பலநாள படுத்திருந்த காத்து வயிறும்
கான பாட்டுக்கு சீழ்க்கை அடிச்சிகிட்டு இருக்கவே
கண்ணெங்கும் தங்கநிறம் ஆட்கொண்டு கண்ணெதிரில் பறக்கும் வண்டும் தக தக வென மின்னியது
பொற்காசு நிறைஞ்சி கிழட்டு பய மனசிலும் ஆனந்தம் வழிஞ்சி
ஓடினான் கடையோரம் காட்டினான் பொட்டலத்தில் கடை மடிக்கும் அளவில் துணைவிக்கு துணி வாங்கி வந்து
பொண்டாட்டி கடம் சுத்தி சேலையை கட்டிக்கிட்டு இருந்தான் கண்மூடி
அக்கங்கள் திறந்து பார்க்கையிலே கண்ட கனாக்கள் கலைஞ்சி போகிருச்சே
கானல் நீரில் மிதந்த கப்பலாய் மறைஞ்சி போச்சி
ஆனா கவிஞன் கற்பனையில் கிழட்டுப் பய காதல் வாழ்ந்துருச்சி