எழுத்து தளமே உமக்கு நன்றி
மறைவா யிருந்தயென்னை
உருவா யாக்கினாய் நன்றி !
கருவா யிருந்தயென் கவியை
நிறை வாக்கியிடம் தந்தாய் நன்றி !
புரியா வுலகதன்னில் புதிராக்கினாய்
பதரா யிருந்தயென்னை பயிராக்கினாய் !
விதியே யெனவிருந்தயெனை
விழியாய் வந்தெனக்கு ஒளியாகினாய் !
வழியறியா திருந்தயெனக்கு
வலை தளமாகி வழிகாட்டினாய் !
ஓராண்டில் நான் பயணிக்க
இலவசமாய் யென்கவியை பிரசவித்தாய்!
ஆதரவின்றி அலைந்தயெனக்கு
ஆயிரம் தோள்தந்து நிறைவாக்கினாய்!
தொடர்கவி படைத்திடவே
தொண்டுள்ளம் கொண்டு இறையாகினாய்!
எத்துனை யுரைத்தாலும் எனை
உந்தன் கடனாக்கினாய் !!
புத்தகம் வாங்கிட காசுமில்லை
புத்துணர்வுக்கு வழியுமில்லை !
உந்தனை நித்தம் வாசித்தே வளர்கின்றேன்
உந்துணைக்கு செலுத்துகிறேன் நன்றி !