இப்படி நாம் காதலிப்போம் பொங்கல் கவிதைக்கான போட்டி 2015

புத்தாண்டின் காதல்
புதுமையாக புலரட்டும்
புரிந்துதான் காதலை
புகுத்திடுவோம் மனங்களில்
பெற்றவர்கள் போதனையும்
பெரும்பேறாய் கொண்டிங்கு
புரட்சியற்ற காதலை
மற்றவர் மனங்கோணா
மாண்புள்ள காதலை
இப்படி நாம் காதலிப்போம்
சொர்க்கமென்று சொல்லத்தகும்
சுகமான காதலாக
காதலை உறவாக்கி
சந்தோசம் உருவாக்கி
அன்புள்ளம் இணையவரம்
கண்டவராய் காதலை
இப்படி நாம் காதலிப்போம்
காதலுக்கு சாதியில்லை
அன்புக்கு மதமில்லை
ஆசைக்கு அடிமையில்லை
வஞ்சமில்லா நேசங்கள்
வகுத்திட நினைத்திட்ட
வண்ணமிகு காதலை
இப்படி நாம் காதலிப்போம்

எழுதியவர் : பாத்திமா மலர் (4-Jan-15, 2:15 pm)
பார்வை : 80

மேலே