சாதி ஒழி மதம் அழி சாதி “பொங்கல் கவிதை போட்டி 2015”
சாதி ஒழி ! மதம் அழி! சாதி ! “பொங்கல் கவிதை போட்டி 2015”
பருக்கையில் பதிந்ததா பந்தியில் வந்ததா சாதி-யது
விழித்திரைக் கண்டு சொல்லு உயர்ந்தவன் எது ?
பெத்தவள் முலைக்கண்ணில் முளைந்த களையோ-யிது
தேவையில்லை இதை நீ கருவோடுக் கலைத்திடு !!
மதக்கோவில் வடிகாலில் மக்கிய சிறு சந்தில்-வடிதட்டி
வழிந்தோடும் வெள்ளையருவி பசுமடியின் பாலடா !!
பசிப்பினியால் வாடும் அடிசிலைத் தேடும் நாவினில்- வொப்பாரித்
தாளம் போடும் பச்சிளத்துக்கு புழுதி தான் பாடையா ?
இனமிங்கு ஈரமற்று இழுதையாய் உலாவுது
நெருடலோ நொடிக்கொருமுறை நெறிகளை நெருக்குது
ஓத்தித்தான் ஓரவஞ்சனை அணையொன்று பாரினில்
என் இனமே பெரிதென்று தக்கடி வித்தைத் காரனடா நீ
பார்பனரென்ன ? சத்ரியரென்ன ? வைசியரென்ன ? சூத்திரரென்ன?
உயிர்ப்போனால் எல்லாம் மண்ணோடு மண்ணாய்
இருகாட்டில் உடல் சுருங்கி போகுமென தெரிந்தும்
எதற்கு தேவையற்ற இனக்கொள்கையுடன் திரிய வேண்டும் ?
இழுதுமீன் கூட இடி விழுந்து இறந்திடும்-இள
மனதில் இணைந்திடும் சாதிவெறிக்குச் சாகா வரம்
நற்பண்புகள் வழிந்து கிடைக்கும் வாசலிலே-பாதாள
நீரான சாதிமதமினை கோலமாய் போடுவதெதற்கு ?
ஈனமகன் செய்த சேட்டையில் படிப்பினையுண்டு
நீ வாழ்ந்திடு வாழ்கையில் அதைக்கொண்டு
பழக்கத்தினால் வந்த வழக்கத்தில் ஒழுக்கமொன்று
இல்லையேல் கபாலம் கரைப்பட்டாலும் கடைப்பிடிகாதே
-கீதங்களின் வானவிநோதன்
இந்தக் கவிதைப் படைப்பு முழுக்க முழுக்க என்னுடையதே என உறுதிமொழியளிக்கிறேன்.
பெயர் : ரெவின்.அ
வயது: 19
வதிவிடம் : கூலிம் , கெடா
நாடு : மலேசியா
அழைப்பிலக்கம் : 04-4907864 / 011-26550214 / 016-5030295