இப்படி நாம் காதலிப்போம் - பொங்கல் கவிதைப் போட்டி 2015
![](https://eluthu.com/images/loading.gif)
நமக்கான பிரபஞ்சமொன்றை
வடிவமைக்கின்றேன் வார்த்தைகளால்
கவிதையால் உருவானதொரு
கண்ணிய உலகத்தின் காதலர்களாகிடுவோம்...
நேசத்திலோர் நீளிடை
நீயும் நானும்தான் வாசிகள்
நிறமாறாக் காதலே - இங்கு
நிரந்தரப் பருவமாகும்...
பருவம் பருகத்துடிக்கும்
நாகரீக காதல் தவிர்த்து
பார்வைகளின் பரிமாற்றத்தில்
பரபோகச் சுவை ருசிப்போம்....
இன்னொருவர் அமருமளவு
இடைவெளியில் நாமிருந்து
இதயத்தால் இணைந்தபடி
இன்பக் கதை பேசுவோம்...
அணைப்பின் தேவையுணர்ந்து
அத்துமீறளற்ற அன்பையறிந்து
அண்டம் உணரவேக் காதலுக்கும் - புது
ஆகமவிதிகள் படைத்திடுவோம்
தந்தையிடம் கண்ட அன்பும்
தாயிடம் கொண்ட பண்பும்
தருக்கின்றிப் பகிர்ந்தே நாமும்
தமிழ்போல வாழ்ந்திடுவோம்...