காதல் கவிதை
![](https://eluthu.com/images/loading.gif)
ஏண்டி புள்ள நீ பொறந்த ....?
எதுக்காக நீ வளர்ந்த ....?
ஒத்தையடி பாதையில ஒதுங்கி
நீயும் போகையில -என்
சித்தம் கலங்குதடி .....
பித்தும் பிடிக்குதடி ....
ஏண்டி புள்ள நீ பொறந்த ...?
எதுக்காக நீ வளர்ந்த ....?
உன் ஒல்லியான இடுப்பு
என்ன கொல்லுதடி மனசுக்குள்ள ...
உன் சிங்கார சிரிப்பொலி என்
சிந்தையத் தான் கலக்குதடி ...
ஏண்டி புள்ள நீ பொறந்த ...
எதுக்காக நீ வளர்ந்த .....
ஓரக்கண்ணால் பாக்கயில- என்ன
உசுரோட புதைக்கறயே....
ஏங்கியே தவிக்குதடி ...செல்லம்
எதனாச்சும் சொல்லடி .....
ஏண்டி புள்ள நீ பொறந்த ...?
எதுக்காக நீ வளர்ந்த ...?
தனிச்சும் தான் நிக்கிறேன் ...
உன்ன நெனச்சு - தாடியும் தான்
வளத்துக்கிட்டேன் ....நான் .
மௌனமா போகாதடி - மானே
மாலையோட என்னைத்தேடி வாயேன் .
ஏண்டி புள்ள நீ பொறந்த ...
எதுக்காக நீ வளர்ந்த ....
நெஞ்சுக்குள்ள நெருப்பாக
எரியுதடி உன் நெனப்பு .
நம்ம ஊரு ஏரிக்கரையில
நானும் தான் காத்துருக்கேன் ...
என்ன விட்டு போகாதடி - கண்ணே !
உசுர விட்டு உடம்பு
மட்டும் வாழ்ந்து என்ன
தான் பயனடி - பெண்ணே !
ஏண்டி புள்ள நீ பொறந்த ...?
எதுக்காக நீ வளர்ந்த ...?