மிருகங்கள் அல்ல நீங்கள்

மிருகங்கள் அல்ல நீங்கள் !
தன் இனத்தையே கொன்று குவிக்கும் ,
தனித்துவம் மிக்க தோழரே,
உம்மை மிருகங்கள் என விளிப்போரை,
நிச்சயம் சாடுகிறேன் -
மிருகங்கள் அல்ல நீங்கள் !

ஆண் பெண் என்னும் இருமையின் அழகில் ,
இயற்கையே மயங்கி பரிணமிக்க ,
தன் சக பாலின் எழில் கூட உம் கண்ணை உறுத்த ,
ரத்தத்தில் மிதக்கடிக்கும் தோழரே ,
உம்மை மிருகங்கள் என விளிப்போரை ,
நிச்சயம் சாடுகிறேன் -
மிருகங்கள் அல்ல நீங்கள் !

வதைப்பதில்லை மிருகங்களும்-
வாய் பசி தவிர்த்து வேறு எக் காரணத்திற்கும்,
உட்படுத்துவதில்லை மிருகங்களும்,
தன் குட்டிகளின் வயதொத்தவைகளை வன் கொடுமைகளுக்கும்!
வன்முறைகளின் உறைவிடமே,
வன் தோழரே,
நீங்களே கூறுங்கள் !
பெரும் இழிவல்லவோ? அவைகளுக்கும்,
உம்மையும் மிருகம் என்று விளித்தால் !!

எழுதியவர் : ஷிவிரா !! (5-Jan-15, 11:31 pm)
பார்வை : 75

மேலே