சாதி அழி மதம் அழி சாதி - பொங்கல் கவிதை போட்டி 2015

சாதி ,சாதி என்று சொல்லிச்
சாதி கள் பார்ப்பார் சண்டைகள் செய்ய .
மதமெனும் பெயரில் மனமே மாறும் .
மனமே மாறிடில் மங்கிடும் அமைதி .


சாதிகள் இல்லையடி பாப்பா என்று
சாற்றினான் அன்றே நம் முண்டாசுக் கவிஞன் .
இன்றோ இதனில் சைவம் சாக்தம்
இயம்பிடு வைணவம் இத்தனை பிரிவு .

நிதமொரு சண்டை நிம்மதி போச்சு .
சதிகளும் சாவும் சத்திய மாச்சு .
எத்தனை சாதி ! எத்தனை மதங்கள் !
எத்தனை மொழிகள் ! எத்தனை பொழில்கள் !

சாதியை அழிப்போம் ! மதத்தினை அழிப்போம் !
மதங்கள் யாவும் ஒரு தாய் மக்கள் .
சாதிகள் தம்முள் பொழியும் உறவு
ஒற்றுமை நெறியை ஓதினர் பெரியோர் .

.
சாதி கள் பல உண்டு இந்திய நாட்டில்
சாற்றுவேன் அனைவரும் இந்தியர் தாமே .
பலமதம் உண்டு பாரத நாட்டில்
பண்பால் அனைவரும் இந்தியர் தாமே .

இத்தனை வகையில் வேறுபட் டாலும்
இந்தியத் தன்மையின் பந்தம் பெரிது .
பல மொழி பலஇனம் பலமதம் கோர்த்த
நன்மணி மாலையே நம் திருநாடு .


கவிதை புனைந்தவர் - திருமதி . சரஸ்வதி பாஸ்கரன்
முகவரி - 50 சேதுராமன் பிள்ளை காலனி , டிவிஎஸ் .டோல்கேட் , திருச்சி -20, 620020.
தொலைபேசி எண்- 9443206012,
என் கவிதைகள் என்னால் மட்டுமே எழுதப்பட்டது என்று உறுதி கூறுகிறேன் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் , 50, சேதுர (6-Jan-15, 12:14 am)
பார்வை : 237

சிறந்த கவிதைகள்

மேலே