கல்வி சுமையா சுவையா
மூன்று வயது குழந்தையின் விசும்பல்கள் : (ஒரு கற்பனை )
-----------------------------------------------------------------------------------------
மூன்று வரிகள்
தொடர்ந்து
பேச முடியவில்லை
என்னால் ..............
ஆனால்
மூன்று மணி நேரம்
பள்ளிக்கு செல்ல வேண்டும் .....
பள்ளிக்கு சென்றால்
ஹோம் வொர்க்
என எதையோ எழுத சொல்லுகின்றார்கள்
ஹோம் என்றால்
என்ன என புரிவதற்கு முன்
ஹோம் இல் வொர்க் செய்ய சொல்கின்றார்கள் ?
எங்க அம்மா இருக்காங்களே ..............
ரொம்ப நல்ல அம்மா !
நான் ஹோம் வொர்க் முடிச்சிட்டா
என்னை ரொம்ப பிடிக்கும்
முடிக்காட்டா ஒரே டென்ஷன் தான் !
எங்க அம்மா டென்ஷன் ஐ பார்த்து பார்த்து எனக்கு
கண் பார்வை குறைந்துட்டுது ...............................
அதற்காக ஒரு பெரிய கண்ணாடி வாங்கி கொடுத்துட்டாங்க
நான் ஆறாவது வரைக்கும் போட்டு கொள்ளலாம் .
திடீர்னு ஒரு நாள்
என அம்மா என்னிடம்
நான் படிச்ச புத்தகம்
எல்லாம் தூங்குகின்றது
நீ வேணும்னா
அதை பயன் படுத்திக்கோ என சொன்னாங்க .
நான் பார்த்தேன் . ஏதோ ஒருவகையில் பயன் படுத்த வேண்டும்.. அவ்வளவு தானே
தூக்கம் வந்தது . படுத்து விட்டேன் . புத்தகத்தின் மேல்.
நான் அழகா இருந்ததால என்னை புகைப் படம் எடுத்துட்டாங்க எங்க அம்மா !!!
ஒரே ஒருவேண்டுகோள்
கல்வியை சுமை ஆக்காதீர்கள் !!!
சுவை ஆக்குங்கள் !