இப்படி நாம் காதலிப்போம் பொங்கல் கவிதைப் போட்டி -2015
முத்தமும் வேண்டாம்
யுத்தமும் வேண்டாம்
முழுமனதாய் காதலிப்போம்....!
உனக்கென நான்
எனக்கென நீ-என
முழுமூச்சாய் காதலிப்போம்....!
சாதியை மறந்து
மதத்தினை துறந்து
உயிராய் காதலிப்போம்....!
மோகமும் வேண்டாம்
தாகமும் வேண்டாம்
உயர்வாய் காதலிப்போம்.....!
வலிகளை பகிர்ந்து
கவலையை மறந்து
மகிழ்வுடன் காதலிப்போம்.....!
காதலின் போதே
காமம் தீர்த்திடும்
காதலை நாம் வெறுப்போம்.....!
காதல் என்ற
ஆயுதம் கொண்டு
சாதியை நாம் அறுப்போம்......
படைப்புக்கு தானே முழு உரிமையாளர் என்று உறுதியளிக்கிறேன்.
பெயர் : அகத்தியா(ராஜ்கமல்)
வயது : 25
வசிப்பிடம்:இலக்கம் 10.முதல்தளம்,சிவசடையப்பர் கோவில் எதிரில்
பேட்டையான்சத்திரம்
தட்டாஞ்சாவடி
புதுச்சேரி-605 009
நாடு : இந்தியா
அழைப்பிலக்கம் : 9003606226-9943506226