இப்படி நாம் காதலிப்போம் பொங்கல் கவிதை போட்டி 2015

கனவுகள் பல சுமந்து
கற்பனைகள் நாம் வளர்த்து
நாட்டை வல்லரசாய் ஆக்கிட
காதலிப்போம் நாம் தேசத்தை..

கற்பழிப்புகள் ஒழிப்போம்
களவுகளை ஒழிப்போம்
லஞ்சத்தை ஒழிப்போம்
நியாயத்தை கேட்போம்..

நிம்மதியாய் நாம் வாழ
நிஜமாய் ஒன்று கூடி
நியாயம் கிடைத்திடவே
நிலையாய் நின்ரிடுவோம்.

இப்படி நாம் காதலித்தால்
நம் தேசத்தின் நிலை
விலை மதிப்பாகிடுமே
வளர்ச்சியாய் வந்திடுமே..

இணைந்தே செயல் பட்டால்
இனித்திடுமே நாம் தேசம்
இப்படியும் நாம் காதலித்தால்
கரும்பாய் இனித்திடுமே.

எழுத்துவில் குரல் கொடுத்து
எண்ணங்களை முன் வைத்து
புரட்சிகள் நாம் படைத்து
புது இந்தியாவை உருவாக்குவோம்..

எழுத்துவில் சமர்பித்த பொங்கல் கவிதை போட்டி 2015.
மூன்றும் தலைப்புகளில் எழுதிய என்
இந்த கவிதைகளுக்கு நானே பொறுப்பு.

எ.மன்சூர் அலி
சவுதி அரேபியா
ரியாத்.

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (7-Jan-15, 11:39 am)
பார்வை : 61

மேலே