இப்படி நாம் காதலிப்போம் பொங்கல் போட்டி கவிதை - 2015

உண்மையாய் காதலிப்போம் ; ஊரறியக் காதலிப்போம் .
பெற்றவரும் மற்றவரும் மனக்குளிரக் காதலிப்போம் .
சாதிமத பேதமின்றி சமத்துவமாய் காதலிப்போம் .
பண்புடனே பிரிவின்றி பாசத்துடன் காதலிப்போம் .

உள்ளத்தால் காதலிப்போம் ; உணர்வுடனே காதலிப்போம் ;
நல்எண்ணத்தால் காதலிப்போம் ; நட்புடனே காதலிப்போம் ;
பொங்கிவந்து இன்பம் சேர்க்க புரிதலோடு காதலிப்போம் .
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக் காதலிப்போம் .

உள்புகுந்து உயிர்வலி தரும் நம்காதலைக் காதலிப்போம் .
தக்கம்வைத்துக் கொள்ள முடியாமல் திக்கித் திணறுகின்ற
தனிமையாய் தவிக்க விடும் நம்காதலைக் காதலிப்போம் .
இதயத்தை ரணமாக்கும் நம்காதலைக் காதலிப்போம் .

நினைவுகளோடு போராடும் காதலைக் காதலிப்போம்
இன்பத்துடன் வாழ்வதற்கு இணைந்தே நாம் காதலிப்போம் .
அலைபாயும் நெஞ்சிற்கு அணைபோடக் காதலிப்போம் .
கனவினை வென்றிட நாம் தினம்தினம் காதலிப்போம் .

மனவலியை நீக்கிடவே மருந்தாகக் காதலிப்போம் .
உயிர்வலி உள்வாங்க உவகையுடன் காதலிப்போம்
வாழ்வின் பயனடைய வளமுடன் காதலிப்போம்
முடிவின்றி காதலிப்போம் ; முற்றிலுமாய்க் காதலிப்போம் .

மனவலியை நீக்கிடவே மருந்தாகக் காதலிப்போம் .
உயிர்வலி உள்வாங்க உவகையுடன் காதலிப்போம்
வாழ்வின் பயனடைய வளமுடன் காதலிப்போம்
முடிவின்றி காதலிப்போம் ; முற்றிலுமாய்க் காதலிப்போம் .

கல்லறைக்கு போகும் வரை கண்ணே நாம் காதலிப்போம் .
இம்மண்ணில் இருக்கும்வரை மனதாரக் காதலிப்போம் .
காதலினால் காதலிப்போம் ; காதலையே காதலிப்போம் ;
இன்னாளும் என்னாளும் இப்படியே நாம் காதலிப்போம்


கவிதை புனைந்தவர் - திருமதி . சரஸ்வதி பாஸ்கரன்
முகவரி - 50 சேதுராமன் பிள்ளை காலனி , டிவிஎஸ் .டோல்கேட் , திருச்சி -20, 620020.
தொலைபேசி எண்- 9443206012,
என் கவிதைகள் என்னால் மட்டுமே எழுதப்பட்டது என்று உறுதி கூறுகிறேன் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் , 50, சேதுர (7-Jan-15, 12:54 pm)
பார்வை : 231

மேலே