நானும் என்கவிதையும்

யாருமற்ற இரவில்
என்னை பேட்டி கண்டன
என் எழுதுகோலும்
காகிதமும் ....

உன் ஆறாம் விரலாய்
இருப்பதில் கர்வமே
ஆனாலும்
என் கேள்விக்கு பதிலுரை
என்றே தொடங்கியது
எழுதுகோல்
காகிதத்தின் கரவொலியுடன்

எவையெல்லாம்
எழுதுவாய்- நீ
என் எண்ணத்தை
உடைப்பவை
என் எழுத்தாகும்

உன் எண்ணத்தை உடைப்பவை
ஏழையின் சிரிப்பும்
பறவை படபடப்பும்
நட்பும் துரோகமும்
நிறைந்த உலகமும்
நிலையில்லா வாழ்வு
என வரிசை படுத்தினேன்

சிரித்திட்ட எழுதுகோல்
காகிதத்தின் காதை கடித்தது
காகிதமோ என்னை நோக்கி
எழுதுவதின் பயன்
என்னென்று உரைப்பயா

உலகம் திருத்திட வேண்டாம்
எவனோ ஒருவன்
சலனப்படும் வேளை
என் வார்த்தைக்கு
கிடைத்திடும் சொர்க்க வாசல்....

கைத் தட்டிய எழுதுகோல்
உன் கவிதையின்
விமர்சனம்
உன் பார்வையில் எப்படி ?

வாசித்திட்ட கவிதை
வசீகரித்தது என கேட்கும் நேரம்
இமயமலையின் குளிர்காற்று
என் காதோரம் தீண்டி செல்லும்

வார்த்தையில் வம்பளந்து
கவிதையா இது
என கேட்கும் வேளை
இரண்டை மனம் சிந்திக்கும்
ஒன்று அவரை நிந்திக்கும்
வசைமொழி பாட
வார்த்தை தேடும்
மற்றொன்றோ அவரை
சிறை பிடிக்க வார்த்தை தேடும்

என் கவிதை தனை
அவருடையது
இவருடையது
எவருடையதோ
என்றும் ஏசுவர்
யோசிக்க இடம் தராது பேசுவர்
மனவெம்பி எண்ணிடுவேன்
எழுத்து வேண்டாமென்று !!!!

என் நிலைப் புரிந்த
என் மனம்
எடுத்து சொல்லும்
கற்பூரங்களின் மணம்
கழுதைகள் தெரிவதில்லை
கேட்டிட்ட விரல்களோ
தொடர்ந்திடும் எழுத தானே

உண்மை உரைத்தாய்
பிறமொழி கலவை
என்ன சொல்கிறாய்
நீயும் சில வேளைகளில்
செய்கிறாய் கலவையை
உடைத்து சொல்லிற்று
கவலையாய் காகிதமும்

அத்தியாவசதிற்க்கு பயன்படுத்தலாம்
அழகுக்கு தேவையில்லை

அடுத்தவர் கவிதை
உன் மதிப்பிடு எப்படி
நல்ல கவிதைக்கு
தாள் பணிவேன்
பொருள் இல்லா கவிதைக்கு
திறந்தே இருக்கும்
நெற்றிக்கண் !!!!

கர்வம் கொண்டயிரண்டும்
சேர்ந்தே கேட்டது
எப்போதும் தீரும்
உன் எழுத்தின் தூரம்

சத்தமாய் பதிலுரைத்தேன்
நான் தீண்டிய வார்த்தை
தமிழில் கொஞ்சம்
என் சிந்தனைக்கு
காத்திருக்கும் வார்த்தை
பல்லாயிரம் மிஞ்சும்
தமிழில் வார்த்தை
தீராத வரை
என் எழுத்திற்கு
முற்றுப்புள்ளியேது!!!!!

பாண்டிய இளவல் மது. க

எழுதியவர் : பாண்டிய இளவல் (மது. க) (7-Jan-15, 1:58 pm)
பார்வை : 86

மேலே