பாதாளம் நோக்கிய பரிணாம வளர்ச்சி

விஞ்ஞானம் சற்றே வித்தியாசமானது
வினை நினைத்து விடை கண்டால் சற்றே
விபரீதமானது !
விதையிட்டு மரம் வளர்த்தான்
மூளையிட்டு வானம் வரை வளர்ந்தான் !
நுண்ணறிவில் நிலா சென்றான்
பகுத்தறிவில் பான்மையுற்றான் !
வானவில்லின் வண்ணம் அறிந்தான்
வான் பேசும் மொழி தெரிந்தான் !
பறவையாகவும் மாறினான்
பாயும் புலியாகவும் சீறினான் !
விஞ்ஞானம் வீசினான்
விதியைக் கூட ஏசினான் !
விண்மீன்கள் கண்களில் ஆச்சரியம் கொள்ளவே
விஞ்ஞானக் கப்பலில் வாநேந்திச் சென்றான் !
தொழில்நுட்பம் வளர்ந்தது
தொலைவில் இயற்க்கை தொலைந்தது !
இயற்கையின் மீது மிளகாய்ப் பொடி தூவினான்
அவன் வாழ்க்கை
இனிதாய் இனித்திட !
மனிதன் வளர்ச்சி கண்டான்
பிற உயிர்கள் வீழ்ச்சி கண்டன !
மனிதன் வாழ ஆரம்பித்தான்
பிற உயிர்கள் வீழ ஆரம்பித்தன !
அந்தப் புறாக்களை
அலைவரிசை அழித்துவிட்டது !
இந்தக் கோழிகளை
அறுசுவை அழித்துவிட்டது !
உடைக்காய் உயிர் கொன்றான்
அந்தனனுக்கும் இன்று
மாமிச உடை தான் !
இது தான் பரிணாம வளர்ச்சி போலும் !
கலைஞனுக்கு சிலை எழுப்பும் ஆசை இருந்தால்
பட்டுச் சேலையில் கலை கொடுக்க
உயிர் கொடடுக்கும்
இப் பட்டுப் பூசிக்கோர் சிலை வேண்டும் ! !
சாவிலே சரித்திரம் பிறக்கலாம்
சாவிலே ஓர் சங்கதி பிரக்கலாமோ !
சாவில் வாழும் சங்கதி நாமல்லவோ !
தொழில்நுட்பம் திளைக்கலாம்
சக உயிர் கெடுக்கலாமோ !
விஞ்ஞானம் விதிக்கலாம்
விஷமேதும் வளரலாமோ !
நாளும் வளர வேண்டும்
நார்த்திசையும் திளைக்க வேண்டும்
சக உயிர் கெடுக்காது
சுக நண்பனாய்
புதியதோர் தொழில்நுட்பம் ! !