கூடி வாழுங்கள்
எறும்பு சொல்லும்
பாடம் தன்னை
எப்போது நாம் கற்பது ?
கருநிறத்துக் காக்கை
போலக் கூடி
என்று வாழ்வது ?
குறும்பு சூழும் குடியை
நாமும் குழியில்
என்று சேர்ப்பது ?
வரன்பு அடர்ந்த
புற்கள் போல
வாழ்வது என்று ஒன்றியே ?
கூடி வாழக் கற்றுக்
கொண்டால் கூடும்
இன்பம் கோடியே ...!
தேடி வந்து நன்மை
யாவும் தெம்பினை வளர்த்திடும் .
வாடி ஓடும்
தீமை யாவும்
வாழ்வு மலரக் காணலாம் .
நாடி வந்து
நலம் அழிக்கும்
நமது பகைவர் வீழ்வரே ..!!