கடலைச்சேராத வைகை நதி

காலமெல்லாம் காத்திருந்து
கள்ளழகர் கால் நனைக்க
கரையை ஈரமாக்கும்
கண்ணீர் நதி...

கடல் சேர வரும் வழியே
கால்வாய்கள் பல வந்து
கரைகளை பிரித்துவிட
கட்டிய வீட்டிற்க்கே கடமை செய்யும்
கண்ணிய நதி...

தாயின்(கடல்) அரவணைப்பில்
சேர்ந்துவிட்டால் நாமும் வற்றாமல்
போவோமோ என்று வருந்தி
வரும் வழியே வாடி நிற்கும்
வாஞ்சை நதி...

துணி துவைத்துலர்த்த
துணை போகும்
தூய நதி...

எழுதியவர் : Ivan (16-Apr-11, 9:15 am)
சேர்த்தது : சகா சலீம் கான்
பார்வை : 705

மேலே