புன்னகைக்கு வயதேது

புன்னகைக்கு வயதேது ? இதைப்
புரிந்து கொண்டால் வலி ஏது ?

மனம் உவந்து சிரிப்பவர்கள் - இந்த
மண்ணில் சொர்க்கம் அமைப்பவர்கள்

சினம் தவிர்த்து வாழ்பவர்கள் - நமது
சிந்தையினை கவர்பவர்கள்.....!!

ஏன் மறந்தோம் நல்ல குணம் ? பிறரை
ஏசும் வார்த்தை எங்கே கற்றோம் ?!

தன்மையில்லா கல்வி கற்றே
தானென்ற அகந்தை கொண்டோம் - எனவே

மனம் திறந்த.....( புன்னகைக்கு வயதேது ( repeat .......

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் வா (9-Jan-15, 12:56 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 80

மேலே