புதுமைச் சுவடு வரை
எரிமலைக் குன்றி லிருப்பிடந் தேடித்
திரியுந் துணிச்ச லடைந்துச் – சிரித்திடும்
வல்லமைக் கொள்கிற வாலிபனே நீயந்தப்
புல்லையும் பூவெனச் சமை!
கார்குழல் கன்னியர் கண்ணசை வில்விழும்
நீர்க்குமிழி போல்நீ மறையாதே! – போர்குணம்
பெற்றப் புரட்சிப் புயலாய் புறப்படு.
வெற்றி வரலாறு செய்.!
விழுவத னாலே வெதும்பித் துடித்தே
அழுதிடும் கண்ணீர்த் துளிகள் – முழுவதும்
சேமித்து நீச்சல் குளமமைத்து நீந்தியிப்
பூமிக் கெதிர்நீச்சல் பழக்கு.
இரைதேடி செல்லும் எழில்பறவைக் கூட்டம்
உரைக்கின்ற உண்மை உணர்ந்தே .விரைந்து
கரைசேர கால்டுத்துச் செல்லும் வழிமேல்
வரைநீ புதுமைச் சுவடு.
மெய்யன் நடராஜ்