நாளைய தமிழும் தமிழரும் – பொங்கல் கவிதைப்போட்டி 2015

வாளெடுத்து வேட்டையாடி
தானமிட்டு மீதம் உண்டு
பாதையெங்கும் தமிழ் விதைத்து
செத்தும் அதற்கே உரமாகிய
செந்தமிழரின் வாரிசுகள் - இச்
சிறு புவியை வென்றிருக்கும் – அவர்
கருவறையின் நீர்க்குடங்கள்
தமிழ் மணந்து கொண்டிருக்கும்
பிற மொழிகள் தமிழின் முன்னே
கரம் கூப்பி நின்றிருக்கும்

ஈழம் முதல் குமரி வரை
பாலம் ஓன்று கட்டப்படும்
கடலுக்குள்ளே எல்லையில்லை
மீனவர்கள் மகிழக்கூடும்

கங்கை நீர் காவிரி வழி
கழனிகளைச் செழிப்பாக்கும்
உழவே தொழிலென்று - நாளை
உலகத் தமிழர் உணரக்கூடும்

இவன் மீசை மளித்தாலும் தமிழனடா
இது பூமி கொள்ளாத கூட்டமடா
இணைந்த கரங்கள் வெல்லுமடா - இவர்
எல்லைக்கோடு புவி சொல்லுமடா

இப் படைப்பு என்னுடையது என்பதை உறுதிப்படுத்துகிறேன்
எழுதியவர் ; இ.செல்வக்குமார்
வசிப்பிடம் ; சென்னை
விலாசம் ; Plot no-25A , Subasri nagar
Mugalivakkam
Chennai - 600125
கைபேசி எண் ;9994144925
வயது ; 26

எழுதியவர் : இ.செல்வக்குமார் (9-Jan-15, 10:12 am)
சேர்த்தது : செல்வா பாரதி
பார்வை : 73

மேலே