சாதி ஒழி மதம் அழிசாதிபொங்கல் போட்டிக் கவிதை 2015
![](https://eluthu.com/images/loading.gif)
சாதிமத பேதமின்றி இங்கே
வாழ்க்கை எங்கே இருக்குது?
பள்ளியிலேயே நிரப்பச் சொல்லி
சான்றிதழும் கேட்குது.
சாதிவாரி கணக்கெடுப்பு
யாருக்கிங்கே தேடுது?
போட்டிபோட்டு பதவியமர
அரசியலுக்கு உதவுது.
உயர்ந்ததென்று தாழ்ந்ததென்று
அரசாங்கமே அலறுது.
நியாய அநியாயமெல்லாம்
யாருக்கிங்கே புரியுது?
மதங்கள்தான் உலகிற்கே
மனிதநேயம் உரைத்தது.
வேற்றுமையில் ஒற்றுமையே
அன்பென்று சொன்னது.
ஒன்று தனித்திருக்க
உயர்வெங்கே கண்டது?
பலகூடி ஒன்றானால்
நிகரில்லை என்றது.
அன்பு பாசமென்றால்
சகிப்புத்தன்மை சேர்ந்தது.
இதை சாதிக்க மனங்கொண்டால்
சாதிமதம் அழிந்தது.
அபர்ணா
இது என்னுடைய படைப்பு என்று உறுதி அளிக்கின்றேன்.