அவளோடு எடுத்து செல்கிறாள்

மணப் பெண்ணாக..
அவள்..
மறு வீடு செல்கிறாள்..
ஞாபகமாய் ..
அஞ்சு வயதில்
அவளுக்கு..
அப்பா வாங்கித்தந்த
அஞ்சு ரூபாய்
ஓலை பொம்மையும்
..
ரெட்டை சடை போடும் வயதில்
அம்மா பின்னி விட்டு
அழகு பார்த்த
பழைய ரிப்பனும்
..
கைப் பையில் மறைத்தபடி ..
கண்களில் நீர் துளிர்க்க..
அவள்..
மறு வீடு செல்கிறாள்..
..

எழுதியவர் : கருணா (9-Jan-15, 5:42 pm)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 238

மேலே