சாலை பாது காப்பு _பாடல்

ரோட்டுல வண்டிய ஓட்டுற அண்ணே
உண்மய நானும் ஒனக்கு சொன்னன்..
சால விதிய கடபிடிச்சா
யாருக்கும் எந்த சேதமுமில்ல
தலைக்கு போடணும் ஹெல்மெட்டு
விபத்த விரட்டனும் நாட்ட விட்டு
வேகம் வேணாம் அசுர வேகம்
பிரேக்க போட்டா நரக லோகம்
பாதுகப்பா போகணும் ரோட்டுல
உங்க குடும்பம் இருக்குது வீட்டுல
விபத்து நடந்துட்டா நூத்திஎட்டு
தூக்கம் வந்தா வண்டிய ஓரம் கட்டு
கிக்கு ஏத்துதா நாட்டு சரக்கு
ஊத்திகினு ஓட்டுனா வரும் வழக்கு
வண்டிக்கு டீசலு உனக்கு புல்லு
விபத்துல சிக்கினா சிறையினு சொல்லு
செல்லுல பேசிட்டு வாகன பயணம்
கவனம் சிதறினா நொடியில மரணம்
சீட் பெல்ட் அணிய சோம்பேறித்தனம்
அத போட்டா வருமா மனசுல பயம்
சொல்றத நீயும் கேட்டுகன்னே
மனசுல நல்லா போட்டுகன்னே
மதிக்காம நீயும் நடந்து பாரு
கண்ணீர் அஞ்சலி வைக்கும் ஊரு