தேயாத செருப்புக்கள்
முரண்பட்ட வாழ்க்கை
தர்க்கிக்க நினைக்கும் ......
உள்ளங்கள்...
உதடு வரை வந்தும்....
வார்த்தைகள் உதிர மறுக்கின்றன..
ஏதோவொன்று தடுப்பது போலொரு
உள்ளுணர்வு...
உற்ற திசையெல்லாம்
சுழலும் என் பார்வைகள்
எதையோ தேடுகின்றன
கண்கள்...
முடிவினில் எமாற்றம் தான்...
முன்னமே ..அறுந்து போனவை
என்பதாலோ என்னவோ
இன்னமும் தாங்கியபடி...நானும்...
மூன்று தசாப்தங்கள்
முழுதாய் முடியப்போகிறது
பெரிதாய்ச் சொல்லவென்று
எதுவுமில்லை....
சூடுகண்ட ரணங்கள்
நிரந்தர வடுக்களாகியும்
காலங்கள் கடந்து விட்டன...
உள்ளம் கேட்கும் ஓராயிரம் கேள்விகள் ..
விடை இல்லா(தாக்கப்பட்ட)..வினாக்கள்
பளிச் என்கிறது...
ஆனாலும் விடை தேடியலைகிறோம்...
போராடத் தான் முயற்சிக்கிறேன்..
தைரியம் எங்கோ தொலைககப்பட்டுவிட்டது...
தேடிப் பெறுதற்கான என் அடையாளமும்
பறிக்கப்பட்டுவிட்டது..
வடுக்கள் தான் வாழ்க்கை
வலிகள் தான் வலிமை
தேடல் தேடல் தேடல்
தொடர்கிறது...
எங்கோ தொலை தூரத்தில்
ஒரு சிறு புள்ளி...
முடிவுப் புள்ளி போலும்....
அந்தோ பரிதாபம்...
மீண்டும் அதுதான் ..
ஆரம்பப்புள்ளி..........
உள்ளங்கை விட்டுப்போன
நிமிடங்களை தேடி மீண்டும்...
தொடரும் தேடல்கள்...
நாங்கள் அறுந்து போனவையல்ல
தேயாத செருப்புக்கள்.......