தாயன்பே - நிரந்தரம்

அனைத்தயு மறந்தபடி,
அணைத்தகை இறுக்கிபிடி,
அன்பென்னு மன்னைக்கு-
அலைகூடத் துள்ளுதடி..!

மடிதாங்கி யெடைதாங்கி,
மாசற்ற உயிர்தாங்கி,
விழிதாங்கும் கண்ணீராய் -
வியப்பாக யிருவுறவு..!

மகளென்னு முறவொன்றை,
மறுஜென்ம மெனசொல்லி,
மண்ணாளும் தேவதையை-
மனதோடு சுமக்கின்றாள்..!

கருமேகக் கார்கூந்தலதை,
கைகளிலே பிடித்துவிட,
காலாட்டு மொருபிள்ளை-
கவலையிலா தோற்றமதில்.!

திசைகாட்டு மன்னையிடம்,
தேனாகப் பேசிவரும்,
தெவிட்டாத வார்த்தைகள்-
தீராது மண்ணுலகில்.!

அன்னைக்கும் பிள்ளைக்கும்,
அழியாத உறவொன்று,
ஆழ்கடலும் அலையும்போல்-
அடித்தாலும் பிரியாது..!

எழுதியவர் : ஜாக் .ஜி .ஜெ (10-Jan-15, 9:56 am)
பார்வை : 148

மேலே