தமிழனின் தவிப்பு
என்னதவம் செய்தோம் என்று எண்ணி
இயற்கையோடு இணைந்து
இனிமையான வாழ்வு வாழ்ந்தோம் அன்று....
இல்லை!! இல்லை!!
கூட்டுக்குள்ளே
குருவிகளாய் வாழ்ந்த எங்களை
கொன்று குவித்தார்களே??
அஞ்சி அஞ்சி அடிமையாய் வாழ்ந்து
உயிருக்கு போராடி ,
உறவுகளைப் பிரிந்து ,
உருக்குலைந்து ,
உண்ண உணவின்றி தவித்தோமே??
மனிதனாய் பிறந்தது குற்றமா?? -இல்லை
ஈழத் தமிழனாய் பிறந்தது குற்றமா??
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
என்றான் - ஆனால் ....
தமிழன் எவன் அவன்
தலையை எடு என்றான் ...
நாட்டை விட்டு வந்து
நாய்படாத பாடுபட்டு ,
வறுமையை சுமந்து ,
கொடுமையைப் பெற்று ,
நாளை என்பதை நினைத்து நினைத்து தவித்தோம்!!!
அரசே !!
நீ !! உறவாய் இருக்க வேண்டாம் -இனி
உயிரோடாவது இருக்க விடு.....