அவன் ஞாபகம்
கனவுக்குள் இருக்கும் உன்னை கழற்றவும் மனமில்லை,
உயிருக்குள் இருக்கும் உன்னை
மறக்கவும் வழியில்லை!
சின்ன சின்ன செயலால்,சிதறாமல்
நெஞ்சில் வருவான்,
சிறு துளைக்குள் செல்லும் காற்றாய்
தெரியாமல் ஓசையிடுவான்.
சிறு புன்னகை வீசி என் வாழ்விற்க்கு
அர்த்தம் தருவான்,
சிறு புயல் போல நெஞ்சில் அடிக்கடி
கோபம் கொள்வான்.
விழியின் பார்வையால் காதல் சொன்னான்,
வார்த்தையின் அர்த்ததில் என்
உயிரை தைத்தான்.
ஏது ஓன்று பார்க்க ,அது அவன் முகமாகிப் போக-புதுப் புது
கனவுகள் காணச் செய்தான்.
ஏதேதோ கேள்வி கேட்டு,என்
கண்ணுக்குள் மெல்ல இறங்கி
என் இதயத்தில் இடம் பிடித்தான்.
அவனோடு வாழாத நாள்,என்
கண் கொண்டும் நான் இவ்வுலகை காணாத நாள்.
அவன் இல்லாத உலகம்,எனக்கு
பொய்யான உலகம்.
என்று தோன்றச் செய்த
அவன் என் காதலன்.
அவனை விட ஏது அழகன்!♥