காதல் கடிதம்

காதல் கடிதம்

அன்பே
உன் மூச்சில் நான் வாழ்கிறேன்

உன் ஜலதோஷம் எனக்கும் பிடிக்கிறது
உன் வாசம் நான் அறிவேன்

நீ மரணித்த மறுநாள்
என் மரணம்

உன் காதலனைக் கூட கழற்றி விடு
என்னை கழற்றி விடாதே

இப்படிக்கு
உன் மூக்குத்தி

எழுதியவர் : குமார் (11-Jan-15, 3:32 pm)
Tanglish : kaadhal kaditham
பார்வை : 160

மேலே