எங்கே அவள்

அந்த கதவிலக்கமும்..
வீதியின் பெயரும்..
ஏன்..
அந்தப் பகுதியின்
பெயரும் கூட
மாறிவிட்டிருந்தது..
மறுபடியும்..
போய் ..
பார்க்கையில்..!
வீடும் கூட..
அமைப்பு..
மாறித்தான் போயிருந்தது..
ஆட்களும் கூட..
இப்போது அவள் இல்லை..
அந்த வீட்டில்..
எங்கோ சென்று விட்டிருக்கக் கூடும்..
என்றாவது ஒரு நாள் வந்து பார்க்கையில்
எனக்கு
தெரிவதற்காக
அவளும் நானும்
சேர்ந்து நட்ட செடி..
மட்டும்..மரமாகி ..
நிற்கிறது..இன்னும் ..
நினைவுகளை ..
வேர்களாகக் கொண்டு!

எழுதியவர் : கருணா (12-Jan-15, 12:22 pm)
Tanglish : engae aval
பார்வை : 89

மேலே