இப்படி நாம் காதலிப்போம் -பொங்கல் கவிதை போட்டி 2015---555

சின்ன சின்ன ஊடல்கள்
செல்ல செல்ல சண்டைகள்
பெரிய பெரிய சந்தோசங்கள்...
தொலை தூர பேருந்து பயணம்
முன் இருக்கையில் நீ...
உன் கூந்தலின் மனம் நுகர்ந்தபடி
பின் இருக்கையில் நான்...
முத்து முத்தாய் விழும் மழைத்துளிகள்
இருவரும் கைகளை நீட்டி நனைந்தபடி நாம்...
சட்டென இடி முழக்கம்
என் நெஞ்சில் முகம் புதைத்து
என்னை கட்டியணைத்தபடி நீ...
அலைகள் மோதும் கடற்கரை
கைகளில் மணலை அள்ளியபடி நான்...
என் கரம் பிடித்து
தோளில் சாய்ந்தபடி நீ...
கைகள் கோர்த்தபடி நடை பயணம்
நீ எதிர்பார்க்காமல் என் கைகளில்
ஏந்தியடி நான்...
நான் முத்தம் கேட்கும் நேரம்
என் இதழ்களை உன் கையால்
பொத்தவெண்டும்...
ஒருவரி செம்பருத்தி உன் கூந்தலில் சூடிவர
மனம் வீசும் குண்டுமல்லி நான்
சூடவேண்டும் உனக்கு...
தாவணியில் வந்து நின்று
உன் பெருவிரல் மண்ணில் கோலமிட...
என்கையால் உன் முகத்தினை
உயர்த்தவேண்டும்...
செல்லமாக நீ சிணுங்கும்போது
உன் தலையில் நான் கொட்டவேண்டும்...
செல்ல கோபத்தில் போடா
என்று நீ சொல்ல...
போடி என்று நான்
சொல்லவேண்டும்...
என்னை நீயும் உன்னை நானும்
கட்டியணைத்து கொள்ள வேண்டும்...
அன்று நம் முதலிரவாக
இருக்க வேண்டும்...
இப்படி நாம் காதலிப்போம்.....