பதவி

எல்லோரது
பார்வையிலும்..
ஒரு முறையாவது
பட்டுக் கொண்டு இருந்த
கர்வம் மிக்க
ஒவ்வொரு தேதியும்
கசக்கி எறியப்பட்டுக் கொண்டே
இருந்தன..
ஒவ்வொரு
அடுத்த நாளிலும் ..!
அறிவதே இல்லை அவை..
தாமும்
கிழிக்க பட்டு..
பின்,..
மறக்கப் படுவோம்
என்று!

எழுதியவர் : கருணா (12-Jan-15, 5:43 pm)
Tanglish : padavi
பார்வை : 124

மேலே