திருநங்கையின் பொங்கல்

மிக பெரிய தொலைக்காட்சி நிலையத்தில் புவேனஸ்வரீ நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரித்து வருகிறாள்...
சாதாரணமாக நல்ல அழகும் உடல்வாகும் தமிழ் உச்சரிப்பும் உள்ளவர்களை தான் இந்த தொலைகாட்சி தொகுப்பாளராக தேர்த்தெடுக்கபடுவார்கள்...
அது அத்தனையும் புவேனஸ்வரீடம் இருந்தது...அந்த தொலைக்காட்சி நிலையத்தில் சேர்ந்து ஆறு மாதம் தான் இருக்கும்...ஆனால் இவள் தொகுத்து வழங்கும் அந்த "மறக்க முடியாத நினைவுகள்" நிகழ்ச்சிக்கு ஏராளமான வாசகர்கள் இவளிடம் பகிர்த்து கொள்ளும் விதமே...ஒரு சுவாரசியமாக இருக்கும்...மிகவும் நிகழ்ச்சிகளை நன்றகா தொகுத்து வழங்குவதில் வல்லவி...வாசகர்களை தன் வசம் படுத்துவதில் திறமை சாலி..... வித்தியாசமான் குரல் வளம் கொண்டவள்....அவளின் செய்கைகளில் ஒரு வித்தியாசமும் இருந்தது.....
சமீப காலமாகவே ஒரு குறிப்பிட்ட ஏரியாவை சுட்டி காட்டி பையூர் கிராமத்தில் அந்த பகுதியில் ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டுமாய் இயக்குனரிடம் கேட்டு தொல்லை செய்கிறாள் புவனேஸ்வரி.....
இப்ப வேண்டம் பிறகு பார்க்கலாம் என்று இயக்குனரும் மழுப்பி கொண்டே வருவார்...
சில சமயங்களில் ஊர் ஊராய் போய் நிகழ்ச்சிகளை படம் பிடித்து வருவது வழக்கம்....
அது போல் அந்த வாரம் ஒரு குறிப்பிட்ட ஊர் தேர்வு செய்து அந்த ஊரில் படபிடிப்பு நடந்தது.....
படபிடிப்பு பகுதி ஒரு பஸ் ஸ்டாண்ட் என்பதால் அங்கு மக்களின் நடமாட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது...
புவனேஸ்வரி கையில் மைக்குடன்...
ஹாய்....எப்படி இருகீங்க....உங்க பேரு....என்று அங்குள்ள ஒருவரிடம் மைக்கை காண்பித்து கேட்டாள்...
எம் பேரு குமார்... என்றவனை..... நிகழ்ச்சிக்குள் உள் வாங்கி கொண்டாள் புவனேஸ்வரி.....
குமார் தன் பள்ளிக்கூட நினைவுகள் சொல்லி மகிழ்ந்து கொண்டான்....
அடுத்தது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் மைக்கை காண்பித்து....
அவளுடன் நிகழ்ச்சியை தொடர்ந்தாள்.....
அந்த பெண்....தன் பெயர் கமலா என்று நிகழ்ச்சிக்குள் நுழைந்தாள்.....
திருமணமாகி அவள் கணவனால் பட்ட கொடுமைகளை சொல்லி கண்ணீர் வடித்தாள்....
இப்படியே நிகழ்ச்சி போய் கொண்டிருந்தது.....
அவர்களின் திட்டப்படி நிகழ்ச்சியை முடித்து கொண்டு நிலையம் திரும்பினர்....
சரியான் சந்தர்பத்தில் மீண்டும் இயக்குனரிடம் அந்த பையூர் கிராமத்தை கேட்டாள் புவனேஸ்வரி....
சரிமா...வர பொங்கலுக்கு அந்த பையூர் கிராமத்துல படபிடிப்பு நடக்க எல்லா ஏற்பாடு செய்யும் படி உத்தரவு கொடுத்து விட்டார்....
புவனேஸ்வரி சந்தோஷ கடலில் முழ்கி எழுந்தது போல் ஆகி விட்டது அவளுக்கு....
எப்போது பொங்கல் வரும் என்று எதிர் பார்த்த வண்ணம் நாட்களை கை விரல்களால் எண்ணிக்கொண்டு....இருக்கிறாள்....
விடிந்தால் பொங்கல் அவள் எதிர் பார்த்து காத்திருந்த நாளும் அவளை தொட்டது....
அதி காலையில் எழுந்து குளித்து முழுகி....விரித்த தலையுடன் பட்டு புடவை....உதட்டு பாலிசு.....கண் மை...நெயில் பாலிச்....என்று தன்னை அலங்கரித்து கொண்டு......ஸ்பாட்டுக்கு புறப்பட்டு சென்றாள்..... அந்த தொலைக்காட்சி படபிடிப்பு குழுவினர்ருடன் புவனேஸ்வரி......
அந்த கிராமத்தை அடைந்த புவனேஸ்வரின் கண்கள் அங்கும் இங்கும் அலை பாய்ந்தது...மனதில் ஒரு படபடப்பும் காணப்பட்டது.....அவளுக்கு....
உமிழ் நீரை உள் இறக்கியவளாய்.....அந்த கூட்டதில் உள்ள சிலரை அடையாளம் கண்டாள்.....
நிகழ்ச்சி ஆரம்பமாகியது......தொலைக்காட்சி நிலையத்தை அறிமுகம் செயதவளாய்.....
மறக்க முடியாத நிகழ்ச்சினை பற்றி சிறு விளக்கம் கொடுத்து விட்டு.....
அந்த கூட்டத்தில் உள்ள ஒரு வாலிபனிடம் மைக்கை காண்பித்து.....கேட்டாள்...
நான் சுரேஷ் என்றவாறு...... அவனின் காதல் தோல்வியை சொல்லி மனம் வருந்தினான்....
பாவம நல்ல நாள் அதவுமா....வருத்தபடதிங்க... சுரேஷ்.....என்று ஆறுதல் சொல்லியவாறு.....
அடுத்தவரிடம் மைக்கை காண்பித்தாள்.....
தனக்கு கல்யாணம் ஆகியதை பற்றி பெருமிதம் கொண்டவனாய்...மகிழ்ச்சியில் உளறினான்...
இப்படியாக அங்கு உள்ள பாதி பேரை பேட்டி கண்டாள்.....
கொஞ்சம் ஓய்வு வேண்டும் என நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது......
புவனேஸ்வரி அந்த தெருவிலலேயே ஒரு நாற்காலி போட்டு அமர்ந்தது கொண்டாள்....
மீண்டும் அவளின் பார்வை அங்கும் இங்கும்.....அலை பாய தொடங்கியது......
அந்த கூட்டதில் ஒருவனாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ஆனந்தை அடையாளம் கண்டாள்.....
ஆம் தம்பி ஆனத்து தான்.....என்று பாசம் பொங்க.....
ஓய்வுக்கு பின் மீண்டும் நிகழ்ச்சி தொடங்கியது....
வார்த்தைகள் தடு மாற்றத்துடன் ஆனந்த் முன்பு மைக்கை நீட்டினாள் புவனேஸ்வரி.....
அவனின் பெயரை விசாரித்தவளாய்.....சொல்லுங்க ஆனந்த்.....உங்க வாழ்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவத்தை........
ஆனந்த் யோசித்தவனாய்.....எங்க கூட பிறந்த வங்க மூனு பேறு....நான்தான் கடைசி...எனக்கு மேல ரெண்டு அண்ணன்கள்...
எங்க அப்பா ஏதோ கூலி வேலை செய்து எங்கள நல்லாத்தான் காப்பத்தினாரு.....எங்க மூத்த அண்ணன் ரெண்டு கெட்டான அதாவது ஆணும் இல்லாம பெண்ணும் இல்லாம இருந்தான்...அவன் தெருவில் நடந்தா கூட பொட்ட....ஒம்போதுன்னு....கிண்டல் பண்ணுவாங்க......ஒரு நாள் இல்ல.... ரெண்டு நாள் இல்ல....காலம் பூர இப்படி தான்... இதனால எங்களுக்கும் அவமானமா இருந்தது...
நானும்,என் அண்ணனும் சேர்த்து ஒரு நாள்...உன்னால நாங்களும் கேவல படுரோம்ன்னு...சொல்லி வீட்டை விட்டு துரத்தி அனுப்பிட்டோம்.....
அவன் வீட்டை விட்டு போனது.... எங்க அம்மா ரொம்ப வேதனை பட்டாங்க....அந்த கவலையில இருந்த எங்க அம்மாவை சந்தோஷ் படுத்த எங்க அண்ணன் ரமேஷ்க்கு கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்து....
எங்க ரெண்டாவது அண்ணன் ரமேஷ்க்கு கல்யாணம் ஆனது... பிறகு எனக்கு கல்யாணம் ஆனது....
எங்க அண்ணியும் எம் பொண்டாடியும் வந்த நேரம் குடும்பத்த பிரிச்சு... எங்க அண்ணி அண்ணனை தனியா கூடிட்டு போயிடுச்சு.... பிறகு குடும்பத்துல நடந்த பிரச்சனைல எங்க அப்பாவும்,அம்மாவும் கவலப்பட்டே... கொஞ்ச நாள்ல.... செத்து போய்ட்டாங்க....
நான் எங் குடும்பாதோட இந்த ஊரிலேயே இருந்துட்டேன்....
என்று ஒப்பாரி வைக்க ஆரபித்து விட்டான்......
அது வரை கேட்டு கொண்டு இருந்த புவனேஸ்வரி.....அவளுக்குள் தேங்கி இருந்த அன்பும் பாசமும் ஒன்று கூடி பொங்கி எழ....கேமரா ஆப்...என்றவாறு ஆனந்தை கட்டி பிடித்து அழ தொடக்கினாள்....
ஆனந்த் என்ன நல்ல பாரு....நான் தான் உன் அண்ணன் இல்ல அக்கா புவனேஸ்(வரன்)வரி.......

ஏறிட்டு பார்த்தான் அடையாளம் சரியாக தெரியவில்லை....
அவள் கண்கள் கண் இமைகளுக்குள் ஒளிந்த கொண்டு இமைகள் மட்டும் படபடத்து கொண்டு இருந்தது... உதடுகள் நாவில் உரசியவாறு.....ஒன்றோடு ஒன்று ஒட்டி கொண்டு இருந்தது...
நான்தா டா....என்று ஒருவருக்கொருவர்.....கட்டி தழுவி பாசம் பொங்க....அந்த பொங்கல் அன்று உறவை பற்றி பிடித்தனர்......
அப்போது தான் தெரிந்தது....அங்குள்ள அந்த தொலைக்காட்சி ஊழியர்களுக்கும்..... இவள் ஒரு திருநங்கை என்று....
அங்கு கூடி இருந்த கூட்டத்தை பார்த்து புவனேஸ்வரி....
ஆமாம்....இந்த ஊரே என்னை எப்படியெல்லாம் கேவலமா பேசி...தலைகுனிவு ஏற்படுத்தினாங்க....இதனால எங் குடும்பம் கேவல படகூடாதுன்னு....என் தம்பிகள் வாழ்க்கை பாதிக்க கூடாதுன்னு.....பத்து வருஷத்துக்கு முன்பே பெங்களூர் போய் என்னை போல் திருநங்கை கூட்டத்தில் சேர்த்து படித்து.....இன்னைக்கு இந்த வேலையிலே இருக்கேன்....என்னை போல திருநங்கையா? பிறபதற்க்கு...நா காரணமா?.....இல்ல எங்கள பெத்தவங்க காரணமா???....இல்ல தெய்வத்தின் காரணமா???....சொல்லுங்க.....என்று அந்த கூட்டதில் பொதுவாக கேட்டாள்....
அவளின் கேள்வியில் நியாயம் இருப்பதை உணர்ந்த அங்குள்ள மக்கள் உள்பட அந்த தொலைக்காட்சி ஊழியர்களும் உணர்த்தனர்....

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (13-Jan-15, 10:56 am)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 184

சிறந்த கவிதைகள்

மேலே