அரபு நாட்டில் ஒரு அவதி

அம்மா எனக்கு கல்யாணம் ஆகி மூனு மாசம் கூட ஆகல.....இப்போ... போய் வெளி நாடுன்னா....என்று.....தலையை சொரிந்தான்....
வேண்டாம் என்று தான் பிடிவாதமாய் சொன்னான் கண்ணன்.....
கஞ்சியோ கூலோ உள் நாட்டிலயே சமபாரித்து வாழத்தான் ஆசை பட்டான்....
உன் தங்கச்சி கல்யாணிக்கு கல்யாண்ம்மாகி ஒரு வருஷம் ஆகியும் கல்யாண் கடனே இன்னும் தீரலே....இந்த கடன எப்படி அடைப்பது....உங்க அப்பாவும் அம்போன்னு விட்டுட்டு போய் விட்டார்....இந்நிலையில நான் என்ன செய்வேன்.... ஒ... என்று ஒப்பாரியே வைத்து விட்டால் ஜானகி....
அவனது அம்மா ஜானகி...மனைவி ருக்மணியும்....சேர்ந்து கொடுத்த கொடச்சலில்....
சரி என்று ஒப்புக்கொண்டான் கண்ணன்....
வெளி நாட்டு பயணம் அதுவும் வீட்டு டிரைவர்....மாதம் முப்பது ஆயிரம் சம்பளத்தில்....எல்லா ஏற்பாடுகளும் நல்லபடி முடிந்தது... அவனது பாஸ்போர்டில் விசா முத்திரை பதிந்து கையுக்கும் வந்து விட்டது...
முதல் விமான பயணம் மனதில் ஒரு பயம் இருந்ததாலும் அதை வெளியே கண்பிக்காதவனாய்...... விமானத்தில் ஏறி அவன் இருக்கையில் அமர்கிறான்....
விமானம் வழக்கம் போல் பறந்து... சேரும் இடத்தில் இறங்கியது...
முதல் முதலில் அரபு நாட்டை பார்க்கிறான்... சரியான பாலை வனம்....ஒரு புறம் ஒட்டகங்கள்....ஒரு புறம் ஆடுகள்...இவைகள் தான் இந்த நாட்டின் முதல் குடி மக்களாய் காட்சி அளிக்கிறது.....
ஏர்போர்ட்ல் இருந்து வரும் வழிலேயே.....இந்த காட்சிகளை கண்டு.... வேலை செய்யும் வீட்டை அடைத்தான் கண்ணன்....
அந்த அரபியின் வீட்டை பார்பதற்கே...ஒரு அரண்மனை போன்று காட்சி அளித்தது அவனுக்கு......
கதவை தட்டிய வாறு உள்ளே நுழைந்தான்...கண்ணன்....
அகலன் வ சகலன்...என்றால் வாருங்கள் என்று அரபு மொழியில்
. வரவேற்றான் ஒரு வெள்ளை அங்கியுடன் அரபி ஷேக்.....
இது தான் உனது அறை என்று காண்பித்து அந்த அறையில் தங்க வைத்தான்...
வீட்டை பிரிந்த கவலை.... புதிய இடம் வேறு.....கண்ணனுக்கு.....அந்த இரவு முழுவதும் தூங்காமல் தவித்தான்...
அந்த அரபி பேசுவதே அவனுக்கு ஒன்றும் புரிவில்லை....எல்லாத்துக்கும் தலை ஆட்டுகிறான்.....
அந்த அரபியின் மனைவி எஜமானியம்மா....
சுப்பர் மார்கட் போகணும் என்று வண்டிய எடுக்கும் படி அரபியில் சொல்ல ஒன்றும் புரியாதவனாக விழிக்கிறான் கண்ணன்...
கொஞ்ச நாட்களாக கை ஜடையில் தான் அவனின் பிழைப்பு போய் கொண்டு இருந்தது....
ஒவ்வொரு.... நாளும்.... பொழுதும்.... அவனை விட்டு போவது ஒரு யுகம்மாக தான் இருந்தது.....
எப்படியோ ஆறு மாதங்கள் அவனை விட்டு போய் கொண்டு இருந்தது....எப்படியும் மீதம் உள்ள நாட்களை தள்ள வேண்டும்...
அவனின் எண்ணங்கள் அவனின் உள் மனதில் இருந்தது அலைமோதியது.....
வீட்டுக்கு தினமும் ஒரு முறையாவது போன் பேசி விடுவான்.....
இவனின் போனுக்காக ஜானகியும்....ருக்மணியும்... காத்திருப்பார்கள்....
சில சமயங்களில் சுவராசியமாக தன் மனைவியுடன் அன்பை பரிமாறிக்கொண்டு பேசி கொண்டு இருக்கும் போது....
எஜமானியம்மா.....கண்ணன் ......கண்ணன்....என்று குரல் கொடுப்பாள்.....
தன் மனைவியுடன் பேசி கொண்டு இருந்த... கண்ணன் இணைப்பை துண்டித்து விட்டு....எஜமானியம்மா முன் ஆஜராகிவிட வேண்டும்...கொஞ்சம் லேட் ஆனால் கூட....
அவளின் பார்வை வேறு விதமாக மாறிவிடும்......
இது பழகி போன கண்ணனுக்கு அவள் சொன்னதுமே செயல்பட துவங்கிவிடுவான்....
இப்படியே தான் நாட்களும்... வாரங்களும்...மாதங்களும் அவனை விட்டு கடந்தது சென்று கொண்டு இருகின்றன......
என்ன செய்வது நாடு விட்டு நாடு வந்து படும் அவதிகள்.... இவனுக்கு முதல் முறை என்பதால் சகித்து கொள்ள முடியாமல் தவிக்கிறான்....
சில நேரங்களில் கடனை நினைத்து சகித்து கொண்டவனாக....தன் மனதை ஆறுதல் படுத்தி கொள்வான்....
வருடங்கள் இவனை கடந்து சென்றாலும்....கடன் இவனை விட்டு செல்வதாக இல்லை....
வந்த புதியதில் அரபி வீட்டு சாப்பாடே பிடிக்காமல் தான் இருந்தது....போக போக பழகி விட்டது...
போனமாதம் போன் செய்யும் போது ருக்மணி அவனின் போடோ கேட்டுருந்தாள்...
அதன் படி போட்டோவை மனைவிக்கு அனுப்பி வைத்தான் கண்ணன்...
போட்டோவை பார்த்த ருக்மணி...தன் கணவனா? என்று ஆச்சிரியத்தில் முழ்கி போனாள்...குண்டாகவும்..வெளுத்து போயும் அந்த போடோவில் காட்சி அளித்தான்....

இப்படி தான் இரண்டு ஆண்டுகளை முற்றிலும் முடித்தவன்....
எல்லா கடனையும் தீர்த்து விட்டு தாயகம் செல்ல திட்டம்மிட்டு....
அரபீயிடம் அனுமதி கேட்டான்....போய் வர உத்தரவு கொடுத்த அரபி....
அவனுக்கு மூனு மாதம் லீவும் கொடுத்து பாஸ்போர்டை கையில் கொடுத்தான்....
ஊர் வரும் தேதியை ஜானகீடமும்,ருக்மனீடமும் தவகல் கொடுத்தான்...கண்ணன்...
மாமியாரும்,மருமகளும்.தங்கச்சி கல்யாணியும் ஆளுக்கு ஒரு லிஸ்டை அவன் முன் வைத்து விட்டனர்... பெரிய லிஸ்ட் கொடுத்து வரும் போது வாங்கி வரும் படி சொல்லிவிட்டார்கள்....
விட்டு போன சொந்தங்கள் எல்லாம் உறவு கொண்டாட வந்தது.....
அதன் படி எல்லாம் வாங்கி கொண்டு ஏர்போர்ட் கஸ்டம்ஸ்......
வாங்கி வந்த பொருளில்...கஸ்டம்ஸ் ஆபிசர் எடுத்து கொண்டது போக மிதியை தான் வீட்டுக்கு கொண்டு போக முடியும்......

இதை எல்லாம் தாண்டி வீடு வந்து சேர்ந்தான்.....கண்ணன்...
ஜானகியும்...ருக்மணியும்...மகிழ்ச்சி வெள்ளத்தில் முழ்கியவர்களாக.....
கண்ணனை வரவேற்றனர்......
ஆளே அடையாளம் தெரியாமல்.....அவனின் உடல் மாறுபட்டு இருந்தது.....
கொண்டு வந்த பெட்டிய பிரிக்க ஆரம்பித்தனர்......
இது எனக்கு... இது உனக்குன்னு.... மாமியாரும்,.....மருமகளும். கல்யாணியும்.... ஆளாய் ஒன்று எடுத்து கொண்டனர்....
தான் மனைவி ருக்மணிக்கு மூனு பவன் தங்க ஜெயின் வாங்கி வந்திருந்த்தான்....அதை ருக்மனியிடம் கண்ணன் கொடுக்க... ஜானகி.அதை அவளுக்கு கொடுக்கவிடாமல்....கல்யாணிக்கு கொடுக்கும்படி சொன்னாள்...
உம் பொண்டாடிக்கு மட்டும் நல்ல புடவையா எடுத்துட்டு வந்துட்டே..எனக்கும் கல்யாணிக்கும் மட்டும் எதோ ஒன்னு எடுத்து கொண்டு வந்திருக்கே...
என்ன... வந்ததும் உம் பொண்டாட்டி சொக்கு பொடி போட்டுட்டாளா????
என்று ஜானகி சொல்ல.....
குறிக்கிட்டு கல்யாணியும் அம்மாவிற்கு சப்போர்ட் பண்ணி பேசினாள்...
பதிலுக்கு ருக்மணி ஏதேதோ பேச....
இதில் இவர்களுக்குள் பெரிய சண்டையாக மாற.....
இதில் ஏற்ப்பட்ட சண்டை தான் ருக்மணி அம்மா வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.....
இரண்டு வருஷமா....ஆசைகளை அடக்கி....ஊர் வந்தவுடன் இந்த பிரச்சனையை சந்திக்க நேரிட்டது கண்ணனுக்கு...
இத்தனை வருடமாக ஆண்மையை கட்டி காத்தவனாச்சே.... மனைவியை விடுவனா???
மனைவியை பின் தொடர்ந்தான் கண்ணன்......
இதனால் தாயும் மகனும் பிரிந்ததுதான் மிச்சம்.....
கண்ணன் மாமியார் விட்டில் தஞ்சம் அடைந்தவனாய்... வாழ்க்கை நடத்தினான்....

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (13-Jan-15, 11:06 am)
பார்வை : 297

மேலே