இரவல் நேரம்
மார்கழிக் குளிரில்..
அதிகாலை..வாசலில்..அருகே..
வாய்க்காலில் ..
விழுந்து விட்ட பத்து நாள் ..
நாய்க் குட்டி..
கீச்..கீச்சென்று..
கத்திக் கொண்டு..
மேலே தூக்கி..
நீர் விட்டு அலம்பினால்..
உடலெல்லாம்..
கடி பட்ட காயங்கள்..
உள்ளே அழைத்து வந்து
பாலை கொடுத்த பின்..
பரிதாபமாய் படுத்துறங்கியது..
அன்புடன் வந்து தினமும்..
அதை பார்த்து விட்டு
மௌனமாய் செல்லும்
அதனுடைய தாய்..
செல்வாக்கோடு வளர்ந்தது
எங்கள் வீட்டில் ..
தெருவில் கிடந்த ஒன்று..
ஒவ்வொரு மனிதனும் கூட..
இப்படித்தான்..
இரவலாக..வந்து..உலகில்..
அடைக்கலம் பெற்று..
வாழ்கிறோமோ..?
அடைக்கலம் கொடுப்பது பல பேர்..
பல நிலைகளில்..
பிறந்தது முதல்..இறக்கும் வரை..!
நாம்தான்.. பொதுவாக..
நினைவில் வைத்துக் கொள்வதில்லை....
நினைவில் வருபவர்களை மறப்பதும் இல்லை ..
நாம் மனிதர்கள் அல்லவா !