அறுவடைத் திருநாளில் மகிழ்ச்சியை விதைப்போம்-பொங்கல் கவிதைப் போட்டி- 2015

அறுவடைத் திருநாளில்
அடுப்பில் வைக்கப்பட்ட
விறகில் இருந்து
விழித்தெழுந்த
தீயின் நாக்குகள்
பானையின் வயிற்றை
வருடிப்பார்க்கின்றன

பொங்கலின் இனிப்புச்சுவை
தீயின் நாக்குகளுக்கும்
இஷ்டம்தானோ

பொங்கிய பொங்கலின்
வெப்ப நுரைகள்
பானையின் சுவர்களில்
பரவுகின்றன

பொங்கலோ பொங்கலெனும்
உற்சாக ஓசைகள்
காற்றினில் கலக்கின்றன

பொங்கல் திருநாளின்
உணர்ச்சிமிகு நிமிடங்கள்
உள்ளங்களில் விதைக்கின்றன
மகிழ்ச்சியின் விதைகளை

அடுத்த
அறுவடைத் திருநாள் வரை
அனைத்து உள்ளங்களிளும்
ஆனந்தம் வளரட்டும் !!!

எழுதியவர் : ஆ.ஜான் பிராங்ளின் (13-Jan-15, 6:57 pm)
பார்வை : 106

மேலே