பொங்கலோ பொங்கல்
வெல்லாம வெலைஞ்சுருச்சு
எங்க மனம் நெரஞ்சுடுச்சு
மாரி மழை பொழிஞ்சதுல
பயிரெல்லாம் பொழைச்சுருச்சு
ஆடு வித்து மாடு வித்து
அரைவையுரு கஞ்சி உண்டு
விதைச்சதெல்லாம் வீடு வந்து
நல்லபடி சேர்ந்துடுச்சு.
சூரியனை வேண்டிகிட்டு
பானையில பொங்கல் வச்சு
நல்லபடி பொங்கிடுச்சு
மனசெல்லாம் மகிழ்ந்துருச்சு
பொங்கலோ ...... பொங்கல் .........