நாளைய தமிழும் தமிழரும்
எலும்புகள் உடையும் வலியை தாங்கிக்கொண்டு
ஈன்றெடுக்கும் அன்னையின் அன்பை
அந்நிய மண்ணில் அனாதையாய் தவிக்கையில் உணர்ந்தேன்.
அதுபோல, என் தமிழின் அருமை கூட
அந்நியன் வந்து மொழிபெயர்க்கையில் உணர்ந்தேன்.
அவன் அறிந்த அளவு எம்மொழியின் செம்மையை
நான் அறிய நேரம் இல்லை காரணம்
பிழைப்பை தேடி அவன் காலில் விழுந்ததாலோ??
அன்று, வயல்வெளியில் துள்ளித்திரிந்த எம்மக்கள்
இன்று, வலைதளங்களுக்கு அடிமைகள் ஆகிவிட்டார்கள்.
உச்சி வெயிலில் பாடுபட்ட உழவன், களைப்பாற
பாடிய பாட்டில் உள்ள அர்த்தங்கள் எல்லாம்
இன்று, புரியாமல் நாம் கேட்கும் பாடலுக்கு ஈடாகுமா???
வள்ளுவன் வரைந்த ஓவியத்தில் தான்
அர்த்தமுள்ளது என்று நாளை
வெள்ளையன் வந்து நம் பிள்ளைகளுக்கு
பாடம் பயிற்றுவிக்கும் காலத்திற்காக காத்திருக்கிறோம் போல.