தை மகளே - தமிழ் மகளே
“மார்கழிக்கு மாலைப்போட்டு வழியனுப்புவோம்
தை’யை மாவிளக்கு ஏற்றிவைத்து கூவி அழைப்போம்..!”
“தை மகளே வருக !
எங்கள் வளங்கள் பெருக்க !
தமிழ் மகளே வருக !
எங்கள் தமிழர்கள் சிறக்க !
வருடம் முழுதும் உழைக்கும் உழவன்
விடுப்பு எடுப்பது ஒருநாள்
அந்நாள் பொன்நாள் உழவர் திருநாள்
எல்லோரும் கொண்டாடும் பெருநாள் !
பொங்கலோ பொங்கல் !
தை பொங்கல் !
பொங்கலோ பொங்கல் !
தை பொங்கல் !
உழவனைப் போன்றே ஓய்வின்றி உழைக்கும் மாடு கன்றுகள்
அதற்கும் ஒருநாள் ஓய்வு கொடுத்து விழா எடுப்போம் வாருங்கள் !
பொங்கலோ பொங்கல் !
மாட்டு பொங்கல் !
பொங்கலோ பொங்கல் !
மாட்டு பொங்கல் !
மூன்றாம் பொங்கல் காணூம் பொங்கல்
இன்பப் பயணம் போகும் பொங்கல்
எங்கும் கூட்டம் எதிலும் கூட்டம்
வீட்டுக்கு வீடு கேளிக்கை ஆட்டம்
பொங்கலோ பொங்கல் !
காணும் பொங்கல் !
பொங்கலோ பொங்கல் !
காணும் பொங்கல் !
“மார்கழிக்கு மாலைப்போட்டு வழியனுப்புவோம்
தை’யை மாவிளக்கு ஏற்றிவைத்து கூவி அழைப்போம்..!”
“தை மகளே வருக !
எங்கள் வளங்கள் பெருக்க !
தமிழ் மகளே வருக !
எஙகள் தமிழர்கள் சிறக்க !