நாளைய தமிழும் தமிழரும் - பொங்கல் கவிதை போட்டி 2015
அந்நிய மொழிகள்
ஆயிரம் முளைத்தும்
அழியாக் கதிராய்
அவள் தான் நிலைத்தாள்....
பேரலை வந்தே
பெருஞ்சேதம் நிகழ்ந்தும்
வள்ளுவன் சிலையாய்
பெருமையுடன் நின்றாள்....
எம்மொழியிலும் காணவியலா
இனிமையது எம்மொழியில்
செம்மொழியாய் சிறந்திடவே
சரித்திரமும் படைத்தாள்....
அம்மியம்மி அரைத்தாலும்
அழித்திட இயலுமோ ?
இம்மையிலும் மறுமையிலும்
இதுபோல் மொழியுண்டோ ?
உணர்ந்திட்ட உள்ளங்கள்
உள்ளதிங்கு சொற்பமாக
உறுதியுடன் தமிழ்பேச
பிறமொழியாகும் அற்பமாக...
தமிழராக வாழ்வதே
தரணியில் நம் பேறு
தடையின்றி எந்நாளும்
தமிழ் வாழுமென்பதில் மறுப்பேது....?