விபச்சாரி
விபச்சாரி!!
இன்றைய
இரவுக்கணவர்கள்-
எத்தனை பேரென்பது
தெரியாது போனாலும்-இவளுக்கு
ஒன்று மட்டும் நிச்சயம் தெரியும்-
அது யாதெனில்....
குடும்பத்தின்
குடல் பசிக்கும்- தன்னை
குதறும் நாய்களின்
உடல் பசிக்கும் - முழுதும்
இரையானது போக- வாழ்வின்
மிச்சமென்றும்
எச்சமென்றும் - தனக்காய்
எதுவுமில்லை என்று!!
இதயம் தவிர
இன்ன பிற உறுப்புகள்-யாவும்
இற்று போய்விட்ட
இறக்காத பிணமாய்-
ஒவ்வொரு முறையும்
ஒவ்வொருவனுக்காக
உடை கழற்றும் போதும்,-கூடவே
உணர்வுகளையும் கழற்றிப்போட்டு
படுக்குமிவளின்
எண்ணம் யாதெனில்-
"எங்களை
தேவதையாக பார்க்க வேண்டாம்-ஆனால்
தேவடியாளாக பார்க்காதீர்கள் என்பதே!!!!"