சொர்க்கத்தைத் தேடி!
மீன்பிடிக்க -
இரவும் பகலும்
பனியிலும் மழையிலும்
புயலிலும் வெயிலிலும்
பாடு இல்லாமல்
கரையில் வந்த - என்
தகப்பனின் பாரத்தைச் சுமக்க
எப்படியோ கல்வி கற்று
நகரத்துக்கு வந்தேன் !
வாடகை அதிகமென்று
சிறு அறையில் குறுகிப்படுத்து
காலத்தை ஓட்டிவிட்ட நிலையில்
காசு மட்டும் மிஞ்சவில்லை!
பசிக்கு மட்டும் பஞ்சமில்லை!
அம்மா ... அப்பா ...
அக்கா ... தம்பி ...
பாசவுணர்வை விட்டு
பரதேசியாய்
பலகாலம் அலைந்து
பலனில்லாமல் ...
மீன்பிடிக்க
மீண்டும் போனால்
கெளரவ குறைவென்று
நகரம் முழுவதும் சுற்றிவந்து
நரகத்தில் மூழ்கிப் போனேன்!
தாயின் பாசம் தொலைத்தேன்!
தந்தையின் அன்பைத் தொலைத்தேன்!
அக்கா தம்பியின் உறவைத் தொலைத்தேன்!
எதற்காக இவையெல்லாம்
என நினைப்பதற்குள்
என்னைத் தொலைத்தேன்!
சொந்த பந்தங்களுடன்
சோறு தின்னு நாளாச்சு!
வேதனையில் நானாச்சு!
எப்போது
என் வீட்டில்
என் சொந்தங்களின் காலடியில்
சொர்க்கத்தைத் தேடி!