மானுடம் அறியும்
அசையமலிருப்பதிலை
நிலையாக நின்றிருக்கும் மரம்!
நகராமலிருப்பதிலை
முடிந்த மட்டும் முன்னேறும் நத்தை!
இந்த பிரபஞ்சம்
அசைந்தும் நகர்ந்தும்
எதையோ ஒன்றை சொல்கிறது.
அதை மானுடம் அறியும்.
ஆயினும் மறுக்கும்
வெப்பமயமாகி
ஓடு அதிர்ந்து
கடல் பொங்கி
சுனாமியாய் சீறும்போதும்
அதை மானுடம் அறியும்.
ஆயினும்.....