முற்று பெறா கேள்வியொன்று
அலையின்றி கடலில்லை
அழுகையின்றி நாங்களில்லை
மீனவனென்றால் தமிழனில்லை
மீண்டுமொரு வெறியாட்டம்
இறாலில் முள்ளுண்டு
எங்கள் அரசு திரிப்பதுண்டு
கல்லென்றால் அரசென்று
காலம் கடந்து புரியுமென்று
வலைவீசி கடல் செல்வோம்
வறுமையென்று உப்பை தின்போம்
கொலைவீசி உயிர் தின்றாலும்
குறை சொல்லோம் இலங்கையென்று
நல்லுறவுதான் நடுவண் அரசு
நச்சுறவுதான் இலங்கையரசு
கச்சைதீவையே கல்லறையாக்கி
கருமாதி நடத்தினால் சாந்தியாக
பிழைப்பை நடத்தவே சட்டங்களும்
பெருமை பேசும் தமிழ்மொழியும்
நாற்பத்தைந்து நாள் மீன்குஞ்சுவளர
நல்ல பயிற்சி தடையோ கடற்படையோ ?