ஏனோ பொங்கல்இனித்ததுI

ஏனோ பொங்கல்
இனித்தது.....இலங்கையில்
ஆட்சி மாற்றமெனப்
புரிந்தது.....!

வந்தவன்
எல்லாம்
தருவான் என்றென்ன
நாம்
தயாரில்லை......இனி
போனவன்
வரவும்
விடுவதில்லை......!

இயந்திரப்
பறவைகளின்
எச்சங்கள்
விழுந்து.....எம்
இனச்
சுதந்திரம்
அச்சப்பட்டுக்
கிடந்தது......!

புனிதர் பாதம்
தரை பட
முதலே.....பாவிகள்
அக்கரையில்
அடங்கினரே......!

சந்தோஷப்
பொங்கல்....சகலர்க்கும்
சுபீட்ஷம்.....நிறைந்து
வாழ.....என்
வாழ்த்துக்கள்.....!

எழுதியவர் : thampu (16-Jan-15, 1:59 am)
பார்வை : 72

மேலே