முள்வேலியில் பனி பொழிகிறது
முள்வேலியில் இன்று பனி பொழிகிறது!!
ரோஜாக்களை அழித்து அதன்
முட்களால் வேலியடைத்த வஞ்சகன்
பின் வாடிய ரோஜா மொட்டுகளை சிறைபிடித்த
முள்வேலியில் தான் இன்று பனி பொழிகிறது...!
வெண்பனி வேலியை சூழ்ந்திருக்க
உறைந்த உதிரமும் அதில் மறந்திருக்க
உயிரும் புதைந்திருக்கும் உடல்கள் உலவும்
முள்வேலியில் இன்று பனி பொழிகிறது...!!
மயிலிறகும் துயில்கொள்ள மயக்கும் கண்ணிகளையும்
குயிலிசையும் நடுக்கம்கொள்ளும் இசைப்ரியாவையும்
கருவறுத்து வலுவிழந்து தள்ளப்பட்ட - அந்த
முள்வேலியில் தான் இன்று பனி பொழிகிறது
கடுங்குளிரில் நடுங்கிகொண்டிருக்கும்
கோட்டையிழந்த அரக்கனுக்கு
காலம் சொல்லும் அழுத்தமான விடை
முல்வேளிகளுக்கு பின்னால்
பனி பொழிகிறது