கொஞ்சம் கொஞ்சமாய் நிறைய கேள்விகள் - 4 - மகிழினி

போராட்டங்கள் ........ வறியவனும் எளியவனும் தனக்கான நியாயங்களை பெற்றுக்கொள்ள போராட்டங்களை தவிர வேறு வழியே இல்லையா ?

ஒவ்வொரு போராட்டத்தின் ஆணிவேரிலும் ஒரு வறியவனின் குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கும் ...... தூரத்தில் இருந்து வேடிக்கை மட்டுமே பார்க்க தெரிந்த நமக்கு அதன் ஒலியும் கேட்காது அதில் உள்ள வேதனைகளும் புரியாது ........

அரசியல் மற்றும் ஆதாயத்திற்கான போராட்டங்களில் பலியாவது கொடும்பாவிகளும், மக்கள் சொத்தும் நிம்மதியும் தான்.... நாம் அவர்களை திரும்பி ஒரு முறை முறைத்தும் கூட பார்ப்பதில்லை ...... முறைத்தால் "மூஞ்சிய கிழிச்சு அனுப்பிடுவானுங்க" அப்படி என்கிற பயம் தான் .....

சூழல்கள் சந்தர்பங்கள் தாண்டி அவர்களின் போராட்டக்குரல் உங்களுக்கும் சேர்த்தே என்பதை என்றேனும் உணர்ந்து இருக்குறீர்களா?

இந்தி மொழி எதிர்ப்பு போராட்டம் ஒரு நாள் இரண்டு நாள் போராட்டம் அல்ல! அது ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு அடித்தளமிட்டது...... அதே தமிழ் மொழியை கையில் கொண்டு 1965-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது...... அந்த மாற்றத்திற்கு பின்பு எந்த மத்திய கட்சியும் நம் தமிழகத்தை ஆளவில்லை என்பது குறிப்பிட தக்கது....... ஆனால் அதே கட்சி செய்த ஊழல்கள் பற்றி யாரும் பேசுவார் இல்லை .......

இந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் தேவை இன்றைய 2015 இல் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டதா? இந்த கேள்வியை கிளறினால் பூதமும் கொல்லிவாய் பிசாசும் கிளம்பும் ......

வரலாற்றை விட்டு இன்றைய நிலைக்கு வருவோம் ... கூடங்குளம் அணுமின் நிலையம் வேண்டாம் என்று திருநெல்வேலி தூத்துக்குடி ஊர் மக்கள் கையில் போராட்டத்தை எடுத்து நாட்கள் வெகுவாகிவிட்டன.... கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் நீருக்குள்ளும் நிலத்திலும் பல்வேறு போராட்டங்கள் முன் வைக்கப்பட்டன .... அரசியல் தலைவர்கள் அதை காதில் வாங்கிக்கொள்வதாகவே இல்லை .......

ஏன் இது ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் என்பதாலா? இல்லை ஊரில் உள்ள கிறுக்குப்பயல்க எல்லோரும் இங்கே தான் இருக்கானுங்க ! நாய வளக்குற எஜமானுக்கு பிஸ்கட் கொடுத்துட்ட எல்லாரும் வாலாட்டுவாங்க என்கின்ற மேட்டுக்குடி திமிரா ?

2013 களின் தொடக்கத்தில் வலுவடைந்த மாணவர்கள் போராட்டம் ஒன்று நடந்தது ..... தமிழ்நாட்டில் தான் ....... ஆரம்பமே இப்படித்தான் இருந்தது... "ராஜபக்சேவை தூக்கிலிடு" ...... சூரிய அஸ்த்தமன போராட்டம் தான் அது இருப்பினும் தொண்டை கிழிய கிழிய கத்திவிட்டு 10 கிலோ மீட்டர் நடந்து போராட்டத்தை முடித்தோம் ....... வீட்டுக்கு வந்தா எங்க அம்மா கைல வெளக்க மாத்தோட ஒரு வரவேற்ப்பு கொடுத்தாங்க.... எனக்கு தாங்க....

முக நூலும் ட்விட்டர் பறவையும் எங்களுக்கு அன்று பெரும் வகையில் உதவி செய்தன ...... சமூக அக்கறை இல்லாமலா இப்போது மாணவர்கள் இருக்கின்றனர்?

மெட்ராஸ் கபே என்ற பெயரில் ஜான் ஆபிரகாம் நடித்த படம் ஒன்று தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்த சமயம் தியேட்டருக்கு வெளியே ஒரு அப்பாவும் அவருடைய பள்ளிவயது பெண்ணும் நின்று கொண்டு ban மெட்ராஸ் கபே என்று கோஷமிட்டுக் கொண்டிருந்தனர்....... இதுவும் போராட்டம் தான் .... ஹைதராபாத் அருகே ஒரு திரை அரங்கு முன்பு இந்த போராட்டம் ......
எவரும் அவருக்கு ஆதரவிற்கு நிற்கவில்லை அவரும் ஆதரவு கோரிடவில்லை........ வெறும் பப்ளிசிட்டிக்காகவா அவருடைய போராட்டம் இருந்திருக்கும்?.....

எல்லாமே போராடி பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு நாம் தள்ளிவிடப்பட்டதிற்கு யார் தான் காரணம்?......

நாமெல்லோரும் படித்துவிட்டோம் , பிட்சா பர்கர் என்ற அமெரிக்க வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ..... அதனால் தான் ஏழை விவசாயியின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் மீதேன் வாயு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டங்கள் பற்றியும் கண்டும் காணமல் இருக்கிறோமா ?

அரசியல் ஆதாயம் இல்லாமல் தம்மக்களின் சுதந்திரத்திற்க்காக இல்லை தங்களின் நியமான கோரிக்கையை முன்னிறுத்தி நடத்தப்படும் போராட்டங்களுக்கு நாம் செல்வதே இல்லை ...... நம்மை சுற்றி என்ன நடக்கின்றது என்பதை அறிந்தும் அறியாமல் இருப்பதையே நாம் எல்லோரும் விரும்புகிறோம் .......

பொது நலம் விட சுய நலம் அத்தனை சுயமானதா ?

தொடர்ந்து கேள்விகள் கேட்போம் ......

நன்றிகளுடன்

மகிழினி

எழுதியவர் : நித்யா (17-Jan-15, 1:24 pm)
பார்வை : 190

சிறந்த கட்டுரைகள்

மேலே