தொன்றுதொட்ட உழவனின் துயரம் போக்க ஒன்றுபடு தமிழா

நல்லேர் பூட்டி நாற்றையும் விட்டோம்
தை பொங்கல் வைத்து தமிழையும் பூசித்தோம்!
"தை"யுந்தா பிறந்தா வழியொன்னு பிறக்குமுன்னு
கண்மாயை பார்த்துதான் காத்திருந்தோம் !
தண்ணீரை காணோம் !கண்ணீரும் இல்லாது காய்கின்றோமே !

மாரியும் இல்லை கண்டலேரியுமில்லை
காவிரி முல்லை கையொடுஞ்ச தொல்லை
சுகமாக சூட் போட்டு வந்து
ஊர் சுற்றி பார்த்துட்டு போற தம்பி !
சோறுதின்ன வழியென்னச் சொல்லு !

படித்திட்டு பகுத்தறிவான எம்மக்கா!
பட்டினம் போய் அலுவலில் நிக்கா !
குளுகுளு காத்து வாங்குற சோக்கா!!
வலுவிழந்து உழவுந்தான் நலிந்து கிடக்கு
நம்பிக்கை தந்திட நீயும் கொஞ்சம் குரலெழுப்பு!

நமக்கென்ன பொறுப்புன்னு நீயுந்தா கிடந்தா
நாளை இருக்காது உனக்குந்தான் உணவு !
உழவனும் கணக்கிட்டா உலக்கையும் மிஞ்சாது
ஊருக்கே தெரிந்த கணக்கு !

கடனுந்தான் தாராமல் பொருளதன் விளையேத்தி
கொல்லாமல் கொல்லுது பாரு-அரசு
பூச்சு மருந்தைத்தான் இலவசமா தந்திட சொல்லு !
உழைக்கின்ற உழவனின் செலவு
கணக்குந்தான் பார்காதோ அரசு !!

இனிப்பு கரும்புக்கு தகுந்த காசின்றி
உழவனும் நிற்கிறான் தெருவில்
இனிப்பு பொங்கலில் கரும்பினை வைத்து
படைத்தாலும் இனிக்குமா பொங்கல்?
அவனவன் பொருளுக்கு வைக்கிறான் விலை-ஆனாலும்
விவசாயபொருளுக்கில்லை ஏன்?இந்த நிலை ?

தமிழனின் தலைமகன் உழவனுகேணிந்த நிலை ?
உணர்வுகள் கெட்டு உரிமையாதென மறந்து -தினம்
உறக்கத்திலிருக்கும் தமிழா !! -பிறர்
உணர்வுக்கு துடிக்கின்ற தமிழா!!
உணவிட்ட உழவனை நீயும் மறந்திடலில் இருக்குதா நீதி ?

எழுதியவர் : கனகரத்தினம் (17-Jan-15, 1:55 pm)
பார்வை : 96

மேலே