மெரீனா கடற்கரையில்

ஆக்ரோஷ அலைகள்
அழகிகளின் ஆடைகளை நனைத்து....!
அடங்கின மெய்சிலிர்த்து, அவர்களின்
அரைசான் பளிங்கு காலடியில்....!

பகலில் மீன் பிடிக்க
படை திரண்ட படகுகள்....!
மாலையில் கரையில் மயங்கின
மறைவாக காதலர்கள் ஒதுங்க....!

காதலர்கள் கொஞ்சலை
கலக்கசெய்யும் வில்லனாய்....!
சுண்டல் விற்கும்
கடற்கரை கால் நிஜார்கள்....!

காதல் ஜோடிகளை
தேடி தேடி
கையேந்தி பிச்சை கேட்கிறார்கள்....!
காதலிமுன், காதலன்
கர்ணன் வேஷம் போடுவான் என....!

குழந்தைகள் மணலை குடைந்து
குதூகலமாய் தேடுகின்றன....!
சிறு சங்கையும்
சிப்பியையும், கிடைத்தன
சிகரெட் துண்டும்
சீரழிக்கும் பான்பராக் கவரும்....!

மாதம் இறுதி என்பதாலும்....!
மார்கழி மாதம் என்பதாலும்....!
சவாரிக்கு காத்து கிடக்கிறது - குதிரை
சுற்ற காத்து கிடைக்கிறது - ராட்டிணம்
வெடிக்க காத்து கிடக்கிறது - பலூன்
பறக்க காத்து கிடக்கிறது - பட்டம்
கடற்கரை காற்றும், கடல் அலையும்
எதற்கும் காத்திருக்கவில்லை....!

கருஇருள் மண்ணைக்கவ்வியதால்
காதலர்கள் கலைந்தனர்
கடற்கரையை விட்டு....!
காதல் சுவடுகளையும்
காதல் புரிதலையும் பதிக்காமல்....!

கைபேசியில் அரட்டைகளையும்....!
கைபையில் கிடந்தவைகளையும்....!
சுண்டல் தின்று
சுருட்டிய காகிதத்தையும்....!
கார சார விவாதங்களையும்
காமச்செயல்களையும்....!
கழிவுக் குப்பைகளாய் பதித்து.

எழுதியவர் : பெ.கோகுலபாலன் (17-Jan-15, 12:03 pm)
பார்வை : 192

மேலே